Monday, March 6, 2017

'மெர்சி வெல்பெயார் ட்ரெஸ்ட்' ன் செய்ற்திட்டம

'மெர்சி வெல்பெயார் ட்ரெஸ்ட்' ன் 2017 ஆம் ஆண்டிற்கான மற்றுமொரு செய்ற்திட்டமாக வறிய பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வொன்று கடந்த 25.02.2017 அன்று காலி கின்தோட்டை கங்காதிலக்க விகாரையில் நடைபெற்றது. ,ந்நிகழ்வில் ட்ரெஸ்டின் தலைவர் அஷ்-ஷைக் ரீ.ஹைதர் அலி, செயலாளர் அஷ்-ஷைக் கம்.,ர்பாத் ,மாம்தீன், உறுப்பினர் அஷ்-ஷைக் எம்.ஷராஃப் நவாஸ் ஆகியோர் ட்ரெஸ்டின் சார்பாக கலந்துகொண்டனர். ,ந்நிகழ்வில் சுமார் 100 சிங்கள பௌத்த மாணவர்களும், 100 முஸ்லிம் மாணவர்களும் சுமார் 1500 ரூபா. பெறுமதியான பாடசாலை உபகரணங்களைப் பெற்றுக் கொண்டனர். நிகழ்வை கின்தோட்டை 'ஃபெமி' அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

குறித்த நிகழ்வில் விஹாரையின் பிரதம மதகுரு, மக்கள் விடுதலை முன்னனி மாகாண சபை உறுப்பினர் பிரதேச பாடசாலை அதிபர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Sunday, January 1, 2017

'மெர்சி வெல்பெயார் ட்ரெஸ்ட்' வெற்றிகரமாக முடிந்தது 2017 ஆம் ஆண்டின் முதல் வேலைத் திட்டம்



மெர்சி வெல்பெயார் ட்ரெஸ்ட்' ன் 'எதிர்கால தலைவர்களை உருவாக்குவோம'; என்ற தொணிப் பொருளில் பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் வைபமொன்று கடந்த 01.01.2016 அன்று கம்பளையில் நடைபெற்றது. இந்நிகழ்வு அதன் தலைவர் அஷ்-ஷைக் ரீ.ஹைதர் அலி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் பிரதம அதிதியாக கம்பளை சுமனஜோதி விஹாராதிபதி மதிப்புக்குரிய ரன்தெட்டிய மஹாநாயக்க ஹிமி கலந்து கொண்டார். இந்நிகழ்வில் சுமார் 125க்கும் மேற்பட்ட பல்லின மாணவ மாணவிகளும் பாடசாலை உபகரணங்கள்ளைப் பெற்றுக் கொண்டனர். கலந்துகொண்ட பிரதம அதிதிகள், கௌரவ அதிகள் நிகழ்ச்சியை சிறப்பாகச் செய்து முடித்த செயற்திட்ட முகாமையாளர்களான அல்-ஹாஜ் எம்.எச்.எம்.றயீஸ் மற்றும் சகோ. எம்.எச்.எம். நழீம் ஆகியோருக்கும் மற்றும் Trend Setters மற்றும் IYMA அமைப்புக்களின் அங்கத்தவர்களுக்கும் நன்றி செலுத்துவதாக 'மெர்சி வெல்பெயார் ட்ரெஸ்ட்' ன் செயலாளர் அஷ்-ஷைக் இர்பாத் இமாம்தீன் தெரிவித்துள்ளார்.