'மெர்சி வெல்பெயார் ட்ரெஸ்ட்' ன் 2017 ஆம் ஆண்டிற்கான மற்றுமொரு செய்ற்திட்டமாக வறிய பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வொன்று கடந்த 25.02.2017 அன்று காலி கின்தோட்டை கங்காதிலக்க விகாரையில் நடைபெற்றது. ,ந்நிகழ்வில் ட்ரெஸ்டின் தலைவர் அஷ்-ஷைக் ரீ.ஹைதர் அலி, செயலாளர் அஷ்-ஷைக் கம்.,ர்பாத் ,மாம்தீன், உறுப்பினர் அஷ்-ஷைக் எம்.ஷராஃப் நவாஸ் ஆகியோர் ட்ரெஸ்டின் சார்பாக கலந்துகொண்டனர். ,ந்நிகழ்வில் சுமார் 100 சிங்கள பௌத்த மாணவர்களும், 100 முஸ்லிம் மாணவர்களும் சுமார் 1500 ரூபா. பெறுமதியான பாடசாலை உபகரணங்களைப் பெற்றுக் கொண்டனர். நிகழ்வை கின்தோட்டை 'ஃபெமி' அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
குறித்த நிகழ்வில் விஹாரையின் பிரதம மதகுரு, மக்கள் விடுதலை முன்னனி மாகாண சபை உறுப்பினர் பிரதேச பாடசாலை அதிபர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

